விவசாயியை தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் விவசாயியான சேகர்(45) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ராமஜெயம்(70), அவரது மகன் பிரபு(35) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சேகருக்கும், ராமஜெயத்தின் குடும்பத்தினருக்கும் இடையே ஊர் பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராமஜெயம் தனது மகனுடன் இணைந்து சேகரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமஜெயம் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான விழக்கினை விசாரித்த நீதிபதி ராமஜெயத்துக்கு 3000 ரூபாய் அபராதமும், 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்திரவிட்டார். மேலும் பிரபுவுக்கு 500 ரூபாய் அபராதமும், ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.