தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு வை எதிர்த்து போட்டியிடுகிறார். அதிமுகவை எப்படியாவது ஆட்சி அமைக்காமல் தொற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி விவசாயி என்றால் டெல்லியில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அவர் கண்டு கொள்ளாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.