Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டின் கதவை உடைத்து…. 1 கோடி ரூபாய் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான லோகநாதன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி இரவு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் புற்று மாரியம்மன் கோவிலுக்கு லோகநாதன் குடும்பத்தினருடன் சாமி கும்பிடுவதற்காக சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அதிர்ச்சியடைந்த லோகநாதன் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்களில் இருந்த 1 கோடி ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்தார் போலீசாரும், கைரேகை நிபுணர்களும் வீட்டில் பதிவாகிய தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |