தேனியில் விவசாயினுடைய வீட்டில் நகையைத் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டில் பீரோவிலிருந்த 12 பவுன் தங்க நகையை கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மர்ம நபர் திருடிச் சென்றார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கம்பத்திலிருக்கும் அரசு மருத்துவமனை அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் லோகநாதன் வீட்டில் கொள்ளையடித்தது அவர்தான் என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அந்த வாலிபர் அவரது வீட்டினுள் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.