மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப பெறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உலக அளவில் விவசாயிகளின் போராட்ட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளித்துள்ளது.
பொதுவாக இந்த சட்டங்கள் மூலம் இந்தியாவின் சந்தைகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும், மத்திய தனியார்த்துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது என்று குறிப்பிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி, அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்த ஒரு வளர்ந்துவரும் ஜனநாயகத்தின் ஓர் அடையாளமாகும் என்று நாங்கள் உணர்கிறோம் என்று கூறியுள்ளார்.