Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

விவசாய சங்கத்தினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும் எனவும், அதற்கு கூலி ரூபாய் 600 ஆக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து உழவர் பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், 6 லட்சம் மதிப்பில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்திற்கு மாநில அமைப்புக் குழு உறுப்பினர் அப்பாவு தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் வேல்முருகன், வட்ட செயலாளர் முருகேசன், வட்ட பொறுப்பாளர் ரீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |