Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“விவசாய நிலங்கள் சேதம்” காட்டுயானைகளின் அட்டகாசம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் பங்களா குடியிருப்பு பகுதியில் அந்தோணி பெருநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று கடனா அணைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

இதனையடுத்து 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் மற்றும் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். எனவே ஊருக்குள் காட்டு விலங்குகள் வராமல் தடுப்பதற்காக சோலார் வேலிகளை அமைக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |