கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் நெல் மற்றும் இயல் மூட்டைகளை வாங்கி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் சுமார் 8000 மூட்டை விவசாய பொருட்களை 62 லட்சத்து 64 ஆயிரத்து 628 ரூபாய்க்கு ஆனந்திடம் விற்பனை செய்துள்ளார்.
ஆனால் ஆனந்த் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து மகேந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.