Categories
மாநில செய்திகள்

விவசாய மின் இணைப்புக்கு கூடுதல் சலுகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு கேட்டு 4.50 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரணப் பிரிவில் 2017 வரையும் சுயநிதி பிரிவில் 2013 வரையிலுள்ள விண்ணப்பங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. எனவே இதன் அடிப்படையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

சாதாரண பிரிவில் மின்சாரம் மின் வழித்தட கட்டணம் இலவசம். சுயநிதிப் பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம். ஆனால் மின் வழித்தட செலவுகளை விவசாயிகளே ஏற்க வேண்டும். இதற்காக விவசாயிகளிடமிருந்து மூன்று வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைவிட வழித்தட செலவு அதிகம் உள்ளதால் சுயநிதி பிரிவில் தட்கல் என்ற விரைவு மின் இணைப்பு திட்டமும் உள்ளது. அதற்கு மோட்டார் பம்ப் குதிரை திறனுக்கு ஏற்ப 2.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் சீனியாரிட்டி இல்லாமல் யார் வேண்டுமானாலும் முழு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த நிலையில் விவசாயிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கும் விதமாக தற்போது சாதாரண பிரிவில் 2017 க்கு பதில் 2013 வரையிலும், சுயநிதி பிரிவில் 2013 க்கு பதில் 2018 வரையும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின்னிணைப்பு வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |