Categories
மாநில செய்திகள்

விவசாய மின் இணைப்பு…. ஏன் மீட்டர் பொருத்தப்படுகிறது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழக மின்வாரியம் விவசாயத்திற்கு மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின் வினியோகம் செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் மற்ற வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் மின் பயன்பாட்டை கணக்கிட மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது என்று மாநில மின் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளில் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது விவசாயத்திற்காக 1,00,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இணைப்புகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியது, விவசாயத்திற்கு இலவசமாக தொடர்ந்து மின்சார விநியோகம் செய்யப்படும் என்றும் கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருத்த தேவையில்லை. மின் இழப்பு ஏற்படுவதை தெரிந்துகொள்ள மீட்டர் படுத்தப்படுகிறது. அப்போதுதான் அதிக மின் இழப்பு ஏற்படு இடங்களை கண்டறிந்து, கூடுதல் மின்வினியோகம் சாதனங்கள் நிறுவ முடியும். இதனால் மின் இழப்பு மற்றும் ஓவர்லோடு போன்றவை ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |