புதிதாக வழங்கப்பட்டுள்ள விவசாய இணைப்பால் மட்டும் தமிழக மின் தேவை தினமும் கூடுதலாக 300 மெகாவாட் முதல் 400 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2021 ஏப்ரல் 1 நிலவரப்படி 21.81 லட்சம் விவசாய மின் இணைப்புகள் இருந்தது. அவற்றிற்கு இலவசமாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்கி வருகிறது. அதன்படி அரசு 2020 – 21ல் விவசாயம் மின்சாரத்திற்கான 4,275 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தமிழக அரசு மின் தேவை தினமும் சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கிறது. அதில் விவசாயத்தின் பங்கு 2000 முதல் 2500 மெகாவாட் விவசாய மின் இணைப்பு கேட்டு 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்து உள்ளது.
இதனால் 2021-22 நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகள் முதல் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். ஒரு மின் இணைப்பிற்கு குறைந்தது 5 முதல் 15 குதிரை திறன் மோட்டார் பம்ப் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிலும் சராசரியாக 5 குதிரைத்திறன் மோட்டார் பம்பை இயக்க 3.50 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. 1,000 கிலோவாட் என்பது ஒரு மெகாவாட் திட்டமிட்டபடி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணி மார்ச் 31 இல் முடிவடைந்திருக்கிறது.
இந்நிலையில் விவசாய இணைப்பு பெற்ற பலரும் மின்சாரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் ஒரு லட்சம் விவசாயிகள் மட்டும் தற்போது தமிழக மின்தேவை வழக்கத்தை விட தினமும் கூடுதலாக 350 மெகாவாட் முதல் 400 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது.