Categories
தேசிய செய்திகள்

விவாகரத்துக்கு மறுத்த பெண்ணுக்கு 23 இடங்களில் கத்திக்குத்து…!! கர்நாடகாவை உலுக்கும் ‘லவ் ஜிகாத்’…!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 27 வயதாகும் அபூர்வா பூரணிக். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு 30 வயதாகும் ஆட்டோ ஓட்டுனர் முகமது அசாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிராமண குடும்பத்தில் பிறந்த அபூர்வா முஸ்லிம் இனத்தை சேர்ந்த முகமதுவை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பெற்றோர் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் தங்களுடைய ஒரே மகளான அபூர்வாவை ஆட்டோ ஓட்டுனர் முகமதுவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு அபூர்வாவை அசைவம் சமைக்க வேண்டும் எனவும் பர்தா அணிய வேண்டும் எனவும் முகமது கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முகம்மதுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன என்பதும் அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அபூர்வா முஹம்மதுவிடம் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும் அதனால் உடனடியாக விவாகரத்து தர வேண்டும் எனவும் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முகமதுவிடம் சண்டை போட்டுவிட்டு தனது பெற்றோர் வீட்டில் வந்து இருந்துள்ளார்.

இந்நிலையில் முகமது பெற்றோர் வீட்டில் இருந்த அபூர்வாவை அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சாலையில் வைத்து சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அபூரவாவை கொடூரமான முறையில் 23 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமதுவை கடந்த 11ஆம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு கர்நாடகம் முழுவதும் லவ் ஜிகாத் என்ற பெயரில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Categories

Tech |