தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனகென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மன ஒத்து பிரிவதாக தங்களது முடிவை அறிவித்தனர். அதன்பிறகு சமந்தா பல படங்களில் நடிக்க தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் விவகாரத்துக்கு முன் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை சமந்தா அதிக விலை கொடுத்து வாங்கி தனது தாயருடன் தற்போது குடியேறி இருக்கிறார். இந்த தகவலை தெலுங்கு நடிகர் முரளி மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது, திருமணமானதும் சம்ந்தாவும் நாக சைதன்யாவும் வீடு தேடினர். அப்போது எனது வீடு பிடித்து போய் விலைக்கு வாங்கி குடியேறினர். அங்கே இருந்தபடி நாக சைதன்யா இன்னொரு புதிய வீட்டை கட்டி வந்தார். அதன் பிறகு என்னிடமிருந்து வாங்கி அவர்கள் குடியிருந்த வீட்டை இன்னொருவருக்கு வெற்றி விட்டனர். இதனையடுத்து விவாகரத்துக்கு பிறகு அவர் கட்டிய புதிய வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது சமந்தா என்னை அணுகி அவர்கள் விற்றுவிட்ட விவாகரத்துக்கு முன் வாழ்ந்த வீட்டை தனக்கு வாங்கி தரும்படி கூறினார். இதனையடுத்து அந்த வீட்டை விலைக்கு வாங்கியவரிடம் பேசி சம்மதிக்க வைத்தேன். மேலும் அவர் வாங்கியதை விட அதிக பணம் கொடுத்து அந்த வீட்டை சமந்தா மீண்டும் சொந்தமாகி கொண்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.