Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும்… தமிழக அரசு அதிரடி..!!

சின்ன கலைவாணர் விவேக் இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார்.

அவரின் உடல் இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். மேலும் சிறந்த நடிகருக்கான பத்ம ஸ்ரீ  உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து அவரின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.

சின்ன கலைவாணர் விவேக் இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  நடிகர் விவேக்க இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறி்க்கையில் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் கலை மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக அவரது இறுதி சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |