நடிகர் விஜய் நேற்று விவேக் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் விவேக். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் மிகச் சிறந்தவர். மரங்களின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் பல லட்சம் மரங்களை தமிழ்நாட்டில் நட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் விஜய்யுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். விவேக் இறந்தபோது விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருந்தார். இதையடுத்து நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று காலை விவேக் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.