Categories
மாநில செய்திகள்

விவேக் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்… விஜயகாந்த்..!!

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்ய நடிகர் விவேக்கிற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் மாரடைப்பு காரணமாக விவேக் தீவிர சிகிச்சையில் உள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் பூரண நலம் பெற்று மீண்டும் திரைத்துறையில் தொடர்ந்து பயணித்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |