Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவன்”…. பள்ளி திறக்கப்படுவதை கண்டித்து உறவினர்கள் முற்றுகை…!!!!!

விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவனின் பள்ளி திறக்கப்பட்டதால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மதுரை மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டி அருகே இருக்கும் நான்கு வழி சாலை அருகே தனியார் பள்ளி இயங்கி வருகின்ற நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மாணவன் சென்ற 22ம் தேதி பள்ளியில் இருந்த பொழுது விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 3-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் அலட்சியத்தால் தான் மாணவன் உயிரிழந்ததாக மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் முற்றுகை இட்டபொழுது போலீசார் பள்ளி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

இதையடுத்து சென்ற இரண்டு நாட்களாகவே சம்பந்தப்பட்ட பள்ளி திறக்காமல் இருந்த நிலையில் நேற்று பள்ளி திறக்கப்பட்டதால் மாணவனின் உறவினர்கள் பொதுமக்கள் பள்ளி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பொழுது பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பள்ளி திறக்க தற்போது அனுமதி இல்லை எனவும் போலீசார் கூறிய பின்னரே அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |