தனியார் விடுதியில் தங்கி ராணுவ வீரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சங்கரன்கோயிலில் அரங்கேறியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகன் இசக்கிமுத்து (34). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார் . இவரது மனைவி முத்துலட்சுமி (32) மற்றும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பியின் திருமணத்திற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலுக்கு வந்த இசக்கிமுத்து ராஜபாளையம் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார் .
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் விஷம் குடித்து உயிர் இழந்துள்ளார். விஷம் குடித்தது குறித்து தனது மனைவியிடம் செல்போனில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட முத்துலட்சுமி பதறிப்போய் உறவினர்களுக்கு தெரிவித்தார். விடுதியில் மயங்கி கிடந்த இசக்கிமுத்துவை அவரது உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.