Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து மயங்கி காதல் ஜோடி…. நடந்தது என்ன…? காட்டு பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலைபுதூரில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரும் மதுரையை உறவினரான 18 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் சிறுமிக்கு 18 வயது நிரம்பிய உடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனின் வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமலைபுதூருக்கு சென்று தங்களுடன் வருமாறு அழைத்தனர். அப்போது பெற்றோருடன் செல்ல சிறுமி மறுப்பு தெரிவித்தார். இதனால் பெற்றார் அவரை அங்கேயே விட்டு சென்றனர்.

நேற்று சிறுமலைபுதூர் அருகே இருக்கும் வனப்பகுதிக்கு சென்ற காதலர்கள் குடும்பத்தினர் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் காதலர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |