புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறின் காரணமாக முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சொக்கம்பேட்டை கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறின் காரணமாக மனமுடைந்த நடராஜன் வயலுக்கு அடிக்க இருந்த மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜனின் மகன் சுரேஷ் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு நடராஜனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.