Categories
அரசியல் மாநில செய்திகள்

விஷம் போல ஏறுது…! ”இதயத்தில் ஈரம் இல்லை” 21ஆம் தேதி இருக்கு பாருங்க…. திமுக அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மே மாதத்தில் இருந்து ஐந்து முறை கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி ஒரு சிலிண்டரின் விலையை 710 ரூபாயாக அதிகரித்துள்ளது தாய்மார்களை நிலைகுலைய வைத்து உள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய பாஜக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல் ஏறி கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருமான இழப்பு, வேலை இழப்பு, நிவர் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்று இதயத்தில் ஈரம் இல்லாமல் பாஜக அரசு அறிவித்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் சாடியுள்ளார். கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் வலியுறுத்தி திமுக எம்பி கனிமொழி தலைமையில் உள்ள மகளிர் அணி சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 21-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முகஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |