விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பாக்யராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.