Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி தொழிலாளி பலி”…. ரூ.15 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை அருகே விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் மூன்றாவது மண்டலம் 28 வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (26), மற்றும் ரவிகுமார் ஆகிய இருவரும் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட முயற்சி செய்துள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷவாயுத்தாக்கி தொழிலாளி நெல்சன் உயிரிழந்துள்ளார். இந்த  நிலையில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் அவருக்கு உதவி செய்த சக தொழிலாளி ரவிக்குமாருக்கும் விஷ  வாயு  தாக்கியுள்ளது.

இதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் ஒரு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளி நெல்சன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |