Categories
தேசிய செய்திகள்

விஷவாயு தாக்கி பள்ளி மாணவ, மாணவிகள் மயக்கம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா, சர்பாபுரம் மண்டலம் வலசப்பாக்கம் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாபாலா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் அருகில் தொழிற்சாலை மற்றும் ஆயில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையின் மூலம் விஷவாயு அப்பகுதியில் பரவியது. இதனால் 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு மூச்சுத்திணறுவதாக கூறும்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதனைப் போல அருகில் உள்ள 6,7,8 ஆம் வகுப்பில் இருந்த 18 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பறையில் இருந்த மற்ற மாணவ, மாணவிகளை வெளியேற்றி பள்ளி மைதானத்தில் அமர வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் அளித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயக்கம் அடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பள்ளியில் மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தங்களது பிள்ளைகளுக்கு என்ன ஆனது என்ற பயத்தில் அலறி அடித்துக் கொண்டு பள்ளியை நோக்கி படையெடுத்தனர். ஒரே நேரத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் விஷவாயு தாக்கியது குறித்து போலீசார், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |