விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எனிமி படத்தின் மூன்றாவது பாடலான ‘லிட்டில் இந்தியா’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . மேலும் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.