விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடித்துள்ளார்.
Veeramey Vaagai Soodum dubbing started today.#Vishal31https://t.co/xTgtXB6PzI#VeerameyVaagaiSoodum pic.twitter.com/mWbQ2ERIsU
— Vishal (@VishalKOfficial) September 6, 2021
விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .