Categories
சினிமா

“விஷாலின் வீரமே வாகை சூடும் படம்”….. பொங்கலுக்கு ரிலீசா….! காரணம் என்ன தெரியுமா…??

விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தியேட்டர்களை மூடும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமவுலி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒமைக்ரான் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படம் மட்டுமே வெளிவர உள்ளது. இதுவும் உறுதியாக வெளியிடப்படுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று காரணமாக இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |