விஷால் நடிக்கும் “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
“வீரமே வாகை சூடும்“ திரைப்படம் விஷால் நடிப்பில் உருவாகி உள்ளது. புதுமுக இயக்குனர் து.ப. சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லனாக மலையாள நடிகர் பாவம் ராஜ் நடித்துள்ளார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலமாமே இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்தனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படம் வெளியாகவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதி என்பதால் இப்படம் வெளியாகவில்லை. இந்தநேரத்தில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவைகளை ரத்து செய்து இருப்பதையடுத்து படக்குழுவினர் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர். அதன்படி,”வீரமே வாகை சூடும்“ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.