விஷாலின் 31-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இளம் நடிகை டிம்பில் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அகிலன், ரவீனா, பாபு ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Here We Go,
Presenting the First Look & Title of #Vishal31 – #VeerameVaagaiSoodum pic.twitter.com/m6R4Q4HOM9
— Vishal (@VishalKOfficial) August 29, 2021
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. மேலும் இன்று நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.