Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் காதலா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்… பிரபல நடிகை விளக்கம்…!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபிநயா நடித்து வருகின்றார். அபிநயா நாடோடிகள் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து ஈசன், பூஜை, குற்றம் 23 போன்ற பல்வேறு படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமாகியுள்ளார். இந்த சூழலில் விஷாலுடன் நடிகை அபிநயா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அவர்கள் இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்த சூழலில் நடிகை அபிநயா மார்கண்டனை பற்றியும் அதில் நடிக்கும் கதாபாத்திரம் பற்றியும் விளக்கம் அளித்து விஷாலுடன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடித்திருப்பதால் கணவன் மனைவியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் பகிரப்பட்டு வருவதாகவும் படப்பிடிப்புக்காக சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எனவும் விளக்கம் அளித்து இருக்கின்றார். மேலும் இந்த படங்களை வைத்து நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவுகிறது அது பொய் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |