Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகர்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

விஷாலின் 32-வது படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இதை தொடர்ந்து விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது விஷாலின் 32-வது படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷால்-32 படத்தில் இளையதிலகம் பிரபு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே தாமிரபரணி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் விஷால், பிரபு இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |