திருமணம் என்றாலே தடைகள் இல்லாமல் நடப்பது என்பது ஆதி காலத்திலிருந்தே மிகவும் சிரமமாக உள்ள ஒன்று. அவ்வாறு இருக்க பூலோகத்தில் விஷ்ணுவுக்கும் லக்ஷிமி தேவிக்கும் நடந்த திருமணத்திற்ககு தடைகள் வாராமல் காவல் காத்த தெய்வத்தின் கதையை பார்ப்போம் .
நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார் . பெருமாள் பக்தரான அவருக்கு புத்திர பாக்கியம் இல்லை . புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார் .யாகசாலை அமைப்பதற்கு நிலத்தை சீர்படுத்திய போது நிலத்தில் ஒரு பெட்டி வெளிப்பட்டது . அப்பெட்டியில் தாமரை மலரில் ,பெண் குழந்தையை கண்டான் .அக்குழந்தைக்கு அலர்மேல் மங்கை என்று பெயர் சூட்டினான். தாமரைக்கு பத்மம் என்ற பெயரும் உள்ளதால் பத்மாவதி என்றும் அழைக்கப்பட்டாள் .
அவளை தேடி சீனிவாசனாக வந்த பெருமாள் தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார் .
ஆகாசராஜன் அரண்மனையில் பத்மாவதியை சந்தித்து திருமணம் செய்ய முடிவு செய்தார் . அவர்கள் திருமணம் நாராயணவனத்தில் நிகழ்ந்தது . தனது மகளின் திருமணம் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்று சிவனையும் ,பார்வதியையும் வேண்டினர் ஆகாசராஜன் . சிவனும், பார்வதியும் தனது அம்சமான வீரபாத்திரரையும் , பத்திரகாளியையும் அனுப்பி வைத்தனர் . திருமணம் தடை இன்றி இனிதே நிகழ்ந்தது .பின்பு ,ஆகாசராஜன் வீரபத்திரருக்கும் பத்திரகாளிக்கும் கல்யாண கோலத்தில் சிலை வடித்து கோவில் எழுப்பினர் .
இத்தல வீரபத்திரரிடம் வேண்டினால் திருமணத்தில் ஏற்படும் தடை நீங்கி திருமணம் விரைவில் நடக்கும் என்பதால் இவரை “திருமண காவலர்”என அழைக்கின்றனர் . இக்கோவிலை சென்று தரிசிக்க பக்தர்கள் காலை 8மணி முதல் மதியம் 12 வரையிலும் மலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சென்று வரலாம் .