விஷ்ணு விஷாலின் மகனை இரண்டாவது மனைவி தூக்கி வைத்திருந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார் விஷ்ணு விஷால். இவர் தற்பொழுது ஆரியன் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இவரின் மகன் ஆரியன் பெயரைத்தான் திரைப்படத்திற்கு வைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. அப்பொழுது அவரின் மகன் க்ளாப் போர்டு அடித்து படபிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.
விஷ்ணு விஷாலின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் ஆரியன். முதல் மனைவியை விவாகரத்து செய்த போதிலும் மகனுடன் நெருக்கமாக இருக்கின்றார் விஷ்ணு விஷால். இவர் இரண்டாவதாக ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார். இத்திரைப்படத்தின் பூஜையின் போது இரண்டாவது மனைவியுடன் ஆரியன் நெருக்கமாக இருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றார்கள்.