Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் நடிக்கும் “கட்டா குஸ்தி”…. வெளியான டிரைலர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். அத்துடன் இந்த படத்தில் கருணாஸ், காளிவெங்கட், முனிஷ்காந்த், கிங்ஸ்லி, ஹரிஷ் பேரடி, அஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் “கட்டா குஸ்தி” படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் படத்துக்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி உள்ளது.

Categories

Tech |