Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“விஷ ஜந்துக்கள் நடமாடுகிறது”…. வகுப்பறைக்குள் ஒழுகிய மழைநீர்…. மாணவர்களின் கோரிக்கை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கோணம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஓடுகளால் வேயப்பட்ட வகுப்பறையின் மேற்கூரை சேதுமடைந்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது. நேற்று அதிகாலை அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழை நீர் வகுப்பறைக்குள் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, எங்கள் பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சிறிய மழைக்கு கூட தாக்குபிடிக்காமல் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகியது. மேலும் கிணறு இருக்கும் பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதால் அங்கு வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றி, மழை நீர் வகுப்பறைக்குள் வராதவாறு மேற்கூரையை சீரமைக்க வேண்டும். பின்னர் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, சுற்று சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |