Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விஷ பூச்சி கடித்துவிட்டது” மயங்கி விழுந்து இறந்த இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விஷ பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தடங்கம் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனி செல்வி(27) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்த செல்வி தனது காலில் ஏதோ விஷ பூச்சி கடித்ததாக கூறி விட்டு மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |