Categories
தேசிய செய்திகள்

“விஸ்மயா தற்கொலை வழக்கு”…. தண்டனையை நிறுத்திவைக்க இயலாது…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கேரளா கொல்லத்தை சேர்ந்த 22 வயது விஸ்மயா நாயர் என்ற பெண் சென்ற வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி தன் கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதில் விஸ்மயா வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் அவரது மரணம் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்மயாவை அவரது கணவர் கிரண்குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஜூன் 22ம் தேதி கைதானார்.

அத்துடன் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்து உள்ளது. இதனிடையில் விஸ்மயா பெற்றோர் மகளின் மரணத்திற்கு கிரண்குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதாவது, கிரண்குமாருக்கு 10 வருடங்கள் சிறைதண்டனையும், 12 1/2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 2 லட்சம் ரூபாயை பாதிக்கபட்ட விஸ்மயா குடும்பத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் கிரண்குமார் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ், சோபி தாமஸ் போன்றோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கோர்ட்டு விதித்த தண்டனையை நிறுத்திவைக்க இயலாது என மறுத்துவிட்டனர்.

Categories

Tech |