Categories
தேசிய செய்திகள்

வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து…. எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி கோயிலில் வருகிற 24ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து மறுநாள் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. ஆகவே இந்த 2 தினங்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது. நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் அன்று காலை முதல் மாலை 7.30 மணிவரை 12 மணிநேரம் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ஆகையால் அன்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூபாய்.300 சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை திட்டமிடவேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்குரிய இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 10 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படவுள்ளது. அத்துடன் டிசம்பர் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

Categories

Tech |