Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு …!!

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆன ஆன்டன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக தொழில் அதிபர் வி.கே.டி.பாலன்  மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை பேஷன் நகரில் ஆண்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில் 1985 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக வி.கே.டி.பாலன் உள்பட 7 பேர் மீது அப்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 பேர் தலைமறைவாகி விட்ட நிலையில் ராதாகிருஷ்ணன் அரசு சாட்சியாக மாறிவிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக வி.கே.டி.பாலன் மட்டும் வழக்கு எதிர்கொண்டு வருகிறார். ஆனால் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதாலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதோடு பாலசிங்கமும்  உயிருடன் இல்லை என்பதாலும் தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வி.கே.டி.பாலன் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதற்கு தமிழக காவல்துறை சார்பில் ஆட்சியகம் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள் பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தனர். உயிருடன் இருக்கும் புற சாட்சிகள்  மூலம் வழக்கை தொடரால் என்றும் அவர் கூறியுள்ளனர்.

Categories

Tech |