சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் பாலசரவணன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் பாலசரவணன் அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாலசரவணனின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி நடந்த உண்மைகளை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாலசரவணனை கண்டித்துள்ளனர். அப்போது வாலிபர் சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாலசரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.