Categories
மாநில செய்திகள்

“வீடியோ எடுக்கணும் வா” எதிர்பாராமல் நடந்த சிக்கல்… பயத்தினால் சிறுவனுக்கு அரங்கேறிய கொடூரம்…!!!

வீடியோ எடுக்க அழைத்து சென்ற மூன்று வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு விடுதியில் ஊழியராக சிறுவன் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி வீடியோ எடுத்து அதை சமூக வலை தளத்தில் பதிவிடுவதே இவரின் வழக்கம். சம்பவத்தன்று அச்சிறுவன் பக்கத்து வீட்டு 3 வயது சிறுவனான அதியனை அழைத்துச் சென்று  வீடியோ எடுத்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அதியன் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் பயந்த போன சிறுவன் அவனது கழுத்தை நெரித்து கொலை செய்து  விட்டு மூட்டையில் போட்டு கட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

எனவே சிறுவனை காணாத பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அதியனின் பெற்றோருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்கள் மகனை விட வேண்டுமானால் 15 லட்சம் எங்களுக்கு தரவேண்டும் என்ற மிரட்டல் செய்தி வந்துள்ளது.இதனை அறிந்த போலீசார் தொலைபேசி அழைப்பில் வந்த எண்னை கண்டுபிடித்து கொலை செய்த சிறுவனை கைது செய்தனர். அப்போது சிறுவன் அதியனை கொலை செய்தது தான் தான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

Categories

Tech |