கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்கி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராம்கி அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை முத்தமிட்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி ராம்கி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராம்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.