Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் தகராறு….. BYE.. BYE.. சொன்ன மனைவி செய்த செயல்…. அதிர்ந்து போன கணவர்…..!!

கணவனுடன் வீடியோ காலில் தகராறு ஏற்பட்டபோது மனைவி கணவன் கண்ணெதிரே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் ஆக்னஸ் நந்தா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 4 வயதில் மகளும் இரண்டரை வயதில் மகனும் இருக்கின்றனர். செல்வராஜ் ஓமனில் இருக்கும் என்ணெய்  நிறுவனமொன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்து வந்தார் ஆக்னஸ் நந்தா.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவி இடையே போனில் பேசும்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வகையில் நேற்று முன்தினமும் கணவருடன் வீடியோ அழைப்பில் இருந்தபோது இருவர் இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது பேசிக் கொண்டிருந்த ஆக்னஸ் நந்தா தனது கணவனை வீடியோ காலில் பார்த்தபடி தன் கையில் வைத்திருந்த பூச்சிமருந்தை  குடித்தார்.

பின்னர் கணவருக்கு பை பை  சொல்லியவாறு போனை கட் செய்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உறவினர்களை தொடர்புகொண்டு விஷயத்தை சொல்ல பதறிப்போன அவர்கள் நந்தாவின் அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கு வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் ஆக்னஸ்.

அவரை மீட்ட உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |