Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ போட்டு இருந்தாரு…! யாராவது பாத்தீங்களா ? உத்தமராக கையெடுத்து கும்பிட்டாரு …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, துவக்கத்தில் நான் அதிகம் பேச விரும்பவில்லை. இங்கே 10 பேர் பேசுவதற்காக பெயர்கள் கொடுத்திருக்கிறீர்கள். அத்தனை பேரையும் பேசவைக்க வாய்ப்பில்லை, நேரமில்லை. நிறைவாக நான் நீண்ட நேரம் பேசுவேன். இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றை மட்டும் இப்போது உங்களிடத்தில் பேச விரும்புகிறேன்.

இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஓ.பி.எஸ். அவர்கள். ஓ.பன்னீர்செல்வம் என்றால் அவருக்கு ஒரு பட்டம் இருக்கிறது. மிகவும் பணிவாக இருப்பார். எம்.ஜி.ஆர். படத்தில் ஒரு பாட்டு பாடுவார். பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று ஒரு பாட்டு பாடி இருக்கிறார். ஆனால் இவருக்கு பதவி வந்தவுடன் எவ்வாறு எல்லாம் காலம் மாறியது என்பது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் அவர் ஒரு வீடியோ படப்பிடிப்பு எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அவ்வளவு அமைதியாக, பொறுமையாக, உத்தமபுத்திரனாக, கையெடுத்துக் கும்பிட்டு நாட்டுக்கு நல்லது செய்தது போல மக்களை ஏமாற்றுகிறார். அரசியலில் ஒரு சிலருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். அதுபோல அதிர்ஷ்டம் அடித்தவர் தான் இவர். 1 முறை அல்ல 3 முறை. கலைஞருக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆர்.க்கு கிடைத்தது. ஜெயலலிதாவிற்கு கிடைத்தது, அது வேறு. இவருக்கு 3 முறை முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தது.

ஊழல் வழக்கில் அம்மையார் ஜெயலலிதா பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. 2001-இல் அம்மையார் ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை தான் முதலமைச்சராக உட்கார வைத்தார். அது முதல் முறை.2-வது முறை 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் சிறைக்குச் சென்றார். அப்போது 2-வது முறை அந்த வாய்ப்பு பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது.

3-வது முறை 2015ஆம் ஆண்டு அவர் உடல் நலிவுற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது பன்னீர்செல்வத்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். இத்தகைய சூழலில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தாரே தவிர நாட்டிற்கு ஏதாவது செய்து இருக்கிறாரா? நாட்டு மக்களைப் பற்றி ஏதாவது சிந்தித்து இருக்கிறாரா? நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் யோசித்தது உண்டா? இல்லை.

அவருக்கு அந்த மூன்று முறை பொறுப்பு கொடுத்த ஜெயலலிதாவைப் பற்றிக் கூட அவர் கவலைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் அந்த மர்மம் என்ன என்று இதுவரை அவரும் சொல்லவில்லை. அந்த கட்சியில் இருக்கக்கூடிய யாரும் சொல்லவில்லை. என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Categories

Tech |