ஈராக்கில் போர்வை போர்த்தியது போல் கிடந்த பனியில் 3 நாய்கள் உற்சாகமாக துள்ளி விளையாடிய காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஈராக்கில் தற்போது கடுமையான குளிர் காலம் நிலவி வருகிறது. இந்த காலநிலையால் அந்நாட்டிலுள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் பனி போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் அந்நாட்டிலுள்ள சுலைமான் பகுதியிலிருக்கும் 3 நாய்கள் கொட்டிக் கிடந்த பனியில் உற்சாகமாக துள்ளி விளையாடியுள்ளது. இதனை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.