முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி நாம் இதில் பார்ப்போம்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் திமுகவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையை மாஸ்க் போட சொல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் காவல்துறை ஆகவே மாறி பொது மக்களையும், போலீசையும் மாஸ்க் அணிய சொல்லி அதிகார அட்வைஸ் செய்யும் உடன்பிறப்பு மாஸ்க் அணிய வில்லை என்று கிண்டலடித்துள்ளார்.