Categories
சினிமா தமிழ் சினிமா

வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. வைரலாக்கி வரும் ரசிகர்கள்….!!!!!!!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டேசன்  நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில்  உருவாகி இருக்கின்ற இந்த படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்த கதாநாயகன் இந்திய அளவில் எவ்வாறு குத்துச்சண்டை வீரராக உயர்ந்தார் என்பதை ஆக்சன் கலந்து சொல்லியிருப்பது போல வெளியாகி  இருக்கின்ற இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு சில வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள்.

Categories

Tech |