75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
*தேசியக்கொடி வீட்டுக்கு மேலே பறக்க வேண்டும்
*கொடி தரையை பார்த்த வண்ணம் சாய்வாக பறக்கக் கூடாது
*கிழிந்த, அழுக்கடைந்த கொடிகளை பயன்படுத்தக் கூடாது
*கொடியை திரைச்சீலையாக பயன்படுத்தக் கூடாது *தலைகீழாக பறக்க விடக் கூடாது *வாகனங்களில் பறக்க விடக் கூடாது
*கொடியை இறக்கியபிறகு அதை கசக்கியோ, சுருட்டியோ வைக்கக் கூடாது