Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளில் பற்றி எரிந்த தீ…. ரூ. 7 1/4 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதால் 7 1/4 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் எரிந்து நாசமானது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூரில் மொட்டையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னட்டு(52), நல்லதம்பி(42) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று சின்னட்டுவின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ நல்லதம்பியின் வீட்டு கூரை மீதும் வேகமாக பரவியது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், 7 1/4 ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |