Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளில் புகுந்த மழைநீர்…. சிரமப்படும் மக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

கழிவுநீர்க் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் இருக்கும் மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ளிட்ட பல பகுதிகளில்  பலத்த கனமழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருக்கும் 10 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்தப் பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த தகவலை அறிந்த நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின், துணை தலைவர் வாசிம் ராஜா மற்றும் கவுன்சிலர் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர், இதனையடுத்து கழிவுநீர் குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |